Monday 20 February 2012

அருள் மழை - 15 - மஹா பெரியவாள் - ஜட்ஜ் இல்லை ஜஸ்டிஸ்



ஜட்ஜ் இல்லை ஜஸ்டிஸ் குடும்பத்தில் சொத்துப் பிரிவினையில் தகராறு.பாகப் பிரிவினையில் உடன்பாடு ஏற்படாததால், வழக்கு நீதி மன்றத்துக்குப் போய் விட்டது. வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவர்,தரிசனத்துக்கு வந்தார். "பெரியவா அனுக்ரஹம் பண்ணணும்.தீர்ப்பு எனக்கு சாதகமாக இருக்கணும்" என்று குழைந்தார்.

பெரியவாள், "நான் ஜட்ஜ் இல்லையே, தீர்ப்பு சொல்றதுக்கு!"என்றார்கள்.

"பெரியவா அனுக்ரஹம் பண்ணினால் போதும்..." "சஞ்சயன் சொல்லியிருக்கார்.....

யத்ர யோகேஸ்வரக் கிருஷ்ணோ யத்ர பார்த்தோ தனுர்தர: !
தத்ர ஸ்ரீர் விஜயோ பூதிர் த்ருவா நீதிர் மதிர் மம !! பெற்றோர் உயிரோடு இருந்த காலத்தில் அவர்களைக் காப்பாற்றவில்லை.சொத்தில் மட்டும் பங்கு வேணும் இல்லையா?" என்று சற்றுக் கோபமாகிச் சொல்லி விட்டு,உள்ளே போய் விட்டார்கள் பெரியவாள்.

இரண்டு மாதங்கள் கழித்து நீதி மன்றத் தீர்ப்பு வந்தது. இவருக்கு விரோதமாக. பெரியவாள் ஜட்ஜ் இல்லைதான், ஆனால் அவர்கள் ஜஸ்டிஸ்- நீதிமான் ஆயிற்றே!..

No comments:

Post a Comment